தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, பெண் வீட்டார் அனைவரும் மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்றார்கள். பின் வசுந்தரா மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து ராகினிக்கு அலங்காரம் செய்தார்கள். அப்போது சரஸ்வதி சொல்வதற்கு மாறாகவே வசுந்தரா பேசினார். சரஸ்வதி சொல்வதை மட்டும்தான் எல்லாரும் கேட்கவேண்டுமா என்று எரிந்து விழுந்தார். மேலும் பல பேருக்கு இரண்டு முகங்கள் இருப்பதாக குத்தலாகா பேசினார். சரஸ்வதி வசுந்தரவை சாப்பிட சொன்னால் கூட, அதற்கு எரிச்சலாக பேசினார். இதை கவனித்த கோதை வசுந்தராவை விசாரித்தார். கோதை இனியும் இந்த வீட்டு மருமகள்கள் சண்டை போடுவதை பார்க்க கூடாது என்றார். எதுவாக இருந்தாலும் பேசி சரி செய்யலாம் என்றார். கோதையின் பேச்சுக்காக வசுந்தராவும் இனி இப்படி நடந்துகொள்ள மாட்டேன் என்று கூறினார். ஆனால் சரஸ்வதியிடம் என்னிடம் பேச இனி முயற்சி செய்ய வேண்டாமா என்று முகத்தில் அடித்தது போல் பேசினார். சந்திரகலா அவரது மகன் சோகமாக இருப்பதை பார்த்து வேதனை பட்டார். நாளை கண்டிப்பாக உனக்கும் ராகினிக்கும் தான் திருமணம் நடக்கும் என்று உறுதியாக கூறினார். மேலும் அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டேன் என்றும் கூறினார். ஆதி தன் அம்மா நம்மை கை விட மாட்டார் என்று நம்பி கிளம்பினார். மண்டபத்தில் சொந்தங்கள் சேர்ந்தார்கள். ராகினி அர்ஜுன் வரவேற்பு விழா ஆரம்பம் ஆனது. திடீர் என்று ஒரு பெண் அங்கு வந்து தன்னை அர்ஜுன் ஏமாற்றிவிட்டார் என்று கூறினார். ஒரு வருடமாக காதலித்து கணவன் மனைவியாக வாழ்ந்தோம் இப்போது என்னை ஏமாற்றி விட்டு இந்த பொண்ணை திருமணம் செய்ய போகிறான் என்று கூறினார். இதை கெட்டவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…..