Tamizhum Saraswathiyum Today Episode | 19.01.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் 60 லட்சம் பணத்தை கோதை கையில் கொடுக்கவும் அர்ஜுன் குடும்பம் அதிர்ச்சியில் இருந்தது. அர்ஜுன் அக்கா அம்மா என்று அனைவரும் எதற்கு இப்படி செய்தார் என்று கேட்டார்கள். அர்ஜுன் தனக்கு மாமா தான் வீட்டில் நடந்த விஷயத்தை கூறினார் என்றார். கோதை அம்மாவுக்கு இந்த 60 லட்சம் பற்றி எப்படியோ தெரிந்துவிட்டது என்று தெரிந்ததும் உடனே அதை வைத்து தான் நல்லவர் என்பது போல் காட்டிக்கொள்ள நினைத்தார். அதன்படியே நடித்தார். அதையும் கோதை நம்பிவிட்டார் என்று சந்தோசத்தில் இருந்தார். நடேசன் மற்றும் நமச்சி இருவரும் சேர்ந்து வெளியே சென்று வடை பஜ்ஜி என்று வாங்கி சாப்பிட்டார்கள். அதே கடைக்கு அர்ஜுன் மாமாவும் வந்து இருந்தார். அவரிடம் வசமாக மாட்டியதும் கூட்டுக்களவானிகளாக மூவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். ஆனால் வீட்டுக்கு வந்ததும் அவர்கள் வெளியே சாப்பிட்டதற்கு கோதையிடம் மாட்டிகொண்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author