Tamizhum Saraswathiyum Today Episode | 19.04.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். பின் வசுந்தராவை சமைக்க உதவியாக வைத்துக்கொண்டார். ஆனால் வசுந்தராவுக்கு எந்த வேலையும் தெரியாமல் முழித்தார். கடுகு எது என்று கூட தெரியாமல் திணறினார். ஆனாலும் கோதை அவரை வைத்தே சமைக்க ஆர்ம்பித்தார். சமையல் செய்ய ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் கோதைக்கு தலை சுற்றல், மயக்கம் என பிரச்சனைகள் வந்தது. இதனால் வீட்டில் பதட்டம் அடைந்து கோதைக்கு மாத்திரை கொடுத்து அமர சொன்னார்கள். உடனே கோதை மீதி வேலையை முடிக்கும்படி வசுந்தராவை கூறினார். ஆனால் வசுந்தரா தனக்கு சமையலில் ஒன்றும் தெரியாது என்று கூறினார். உடனே சரஸ்வதி தானே சமைப்பதாக கூறினார். இந்த நிலையில் வசுந்தரா தனியாக சமைக்க முடியாது என்று கூறினார். ஆனால் கோதை தன் வீம்புக்காக வசுந்தரா தனக்கு தெரிந்ததை செய்யட்டும் என்று கூறினார். சரஸ்வதியை சமையல் அறையில் அனுமதிக்க மாட்டேன் என்றார். இதனால் கோவம் அடைந்த தமிழ், இந்த மாதிரியான ஒரு நிலையில் கூட சரஸ்வதி சமையல் அறைக்கு செல்ல கூடாது என்றால் எதற்காக எங்களை வீட்டுக்குள் சேர்க்க வேண்டும் என்று கேட்டார். இனி இந்த வீட்டில் நாங்கள் சாப்பிட போவது இல்லை என்றும் கூறினார். இதை கேட்ட கோதை அதிர்ச்சி அடைந்தார். ஆனால் சரஸ்வதி இதெல்லாம் தவ்ரு என்று கூறி கோதை செய்வது தான் சரி என்றும், எப்போது மன்னிக்க மனம் வருகிறதோ அப்போவே மன்னிக்கட்டும் என்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author