தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியை விளக்கு ஏற்ற வேண்டாம் என்று கோதை கூறினார். வசுந்தரா மட்டுமே விளக்கு ஏற்ற வேண்டும் என்று கூறினார். இதனால் மனவருத்தத்தில் தமிழும் சரஸ்வதியும் புலம்பினார்கள். ஆனால் தமிழ் இவளோ தூரம் எப்படியோ வெற்றி பெற்று வந்தாச்சி, இனியும் அம்மா முழு மனதோடு ஏற்றுக்கொள்வார் என்று சரஸ்வதியை சமாதானம் செய்தார். அன்று இரவு வசுந்தரா பிறந்தநாள் என்று சரஸ்வதி தெரிந்து வைத்துக்கொண்டு அவருக்காக கேக் செய்து இரவு 12 மணிக்கு வெட்ட திட்டம் போட்டு இருந்தார். மேலும் வசுந்தராவுக்கு தெரியாமல் ஏற்பாடுகள் அனைத்தையும் தமிழ் மற்றும் ராகினியை வைத்து செய்தார். பின் கோதை நடேசன் ராகினி தமிழ் சரஸ்வதி அனைவரும் சேர்ந்து வலது சொல்லி வசுந்தராவை கேக் வெட்ட வைத்தார்கள். ஆனால் கோதை இனி இந்த நள்ளிரவு கொண்டாட்டம் எதுவும் இருக்க கூடாது, இதுதான் கடைசியாக இருக்க வேண்டும் என்று கூறி அவர் அறைக்கு கிளம்பினார். அடுத்த நாள் காலையில் சந்திரகலா வசுந்தரா பிறந்தநாளுக்காக ஒரு வண்டி 10 லட்சத்துக்கு வாங்கி வந்து நிறுத்தினார். சரஸ்வதி முன் தன் பண பலத்தை காட்ட வேண்டும் என்று நினைத்து செய்தார். ஆனால் சரஸ்வதி அதை பார்த்து சந்தோசமா இருந்தார். கார்த்திக் அந்த சமயம் ஊரில் இருந்து திரும்பி வந்துகொண்டு இருந்தார். அப்போது கோதைக்கு அழைத்து விவரங்களை கூறினார். கோதை வசுந்தராவுக்கு பிறந்தநாள் என்று கூறிய பின் தான் கார்த்திக் வசுவுக்கு வாழ்த்து கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…