Tamizhum Saraswathiyum Today Episode | 19.06.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 19.06.2023
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை தன் பங்குக்கு பக்கத்து கம்பேனியில் உள்ள பிரச்சனையை சரி செய்ய வந்து இருந்தார். அந்த முதலாளியிடம் அவரது பிரச்சனையை கேட்டார். அந்த முதலாளியும் தனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது, இப்போது அதை சரி செய்ய தொழிலாளிகள் சம்பளத்தை குறைத்து வாங்கிக்கொண்டாள் போதும். ஆனால் அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் ஸ்ட்ரைக் செய்து மேலும் நஷ்டத்தைதான் தருகிறார்கள் என்று கூறினார். அதே நேரம் தொழிலாளர்கள் சங்க யூனியன் தலைவரையும் வைத்து பேசினார்கள். அவர் தனக்கும் தன் போல் உள்ள தொழிலாளர்களுக்கும் சம்பளத்தை நம்பிதான் இருக்கிறோம். ஆனால் இவர் அதை பற்றி கவலைப் படவில்லை என்று கூறினார். இதை கேட்ட பின் கோதை நடுநிலையாக பேசுவார் என்று நினைத்தார்கள். ஆனால் கோதை முழுக்க முழுக்க முதலாளி பக்கம் மட்டுமே யோசித்து பேசினார். மேலும் தொழிலாளர்களை பற்றி எந்த கவலையும் இல்லை என்பது போல் பேசினார். மேலும் அவர்களை மந்திரி பெயரை சொல்லி மிரட்டுவது போல் பேசினார். பின் அவர்களுக்கு இருக்கும் வேலையும் போய் விடும் என்று அதிகாரமாக பேசினார். இன்று கோதை பேசியது முழுக்க முழுக்க தான் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று மட்டுமே யோசித்தார். இதை தெரிந்து கொண்ட தமிழ் அவர் ஒரு திட்டம் போட்டார் உடனே தொழில் துறை அமைச்சரை பார்த்து பேசி இதற்கு ஒரு முடிவு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தார். அதற்கான ஏற்பாடுகளும் செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….
About Author
Auto Amazon Links: No products found.