தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா தற்கொலை முயற்சி செய்து இருப்பதை தெரிந்த கார்த்திக் பதட்டமாக மருத்துவமனைக்கு வந்தார். வந்ததும் வசுந்தராவை பார்த்து கதறி அழுதார். தனக்கு வசுந்தரா மீது அளவு கடந்த காதல் இருப்பதாக கூறினார். மேலும் வசு இல்லாமால் இந்த வாழ்க்கையே தனக்கு நரகம் ஆகி விடும். தெரியாமல் கோவத்தில் சொன்ன வார்த்தைக்காக இப்படி ஒரு செயலை செய்யலாமா என்று கதறினார். சற்று நேரத்தில் வசுந்தரா கண் முழித்து பேசினார். இது அனைத்தும் நடிப்பு என்றார்கள். இதை கேட்டதும் கார்த்திக் கோவத்தில் கத்தினார். ஆனால் வசுந்தராவுக்கு நீ வைத்து இருக்கும் காதல் உண்மை என்று நிரூபிக்க தான் இப்படி செய்தோம் என்றார்கள் தமிழ் மற்றும் சரஸ்வதி. பின் கார்த்திக் வசுந்தரா இருவரும் மணம் விட்டு பேசி அழுது புலம்பினார்கள். மேலும் கார்த்திக் வசுந்தரா இருவரையும் தனியாக சுற்றி பார்க்கும்படி அனுப்பி வைத்தார்கள். பின் இரவில் அவர்களுக்கு முதல் இரவுக்கு அவர்களது அறையை ஏற்பாடு செய்தார்கள். அதை பார்த்த கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவருமே ஆச்சர்யப்பட்டார்கள். மேலும் இவர்களது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று நினைத்தார்கள். கொஞ்ச நேரம் பேசி சிரித்து சந்தோசமாக இருந்தார்கள். அந்த நேரம் வசுந்தரா நீ தமிழையும் சரஸ்வதியையும் மனதார ஏறுக்கொண்டதற்கு நன்றி என்றார் வசுந்தரா. ஆனால் அதற்கு கார்த்திக் தான் அப்படி எதுவும் சொல்லவே இல்லையே என்றார். இதனால் மறுபடியும் அவர்களுக்குள் வாக்குவாதம் வந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…