Tamizhum Saraswathiyum Today Episode | 19.08.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 19.08.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை வீட்டில் அருகம்புல் ஜுஸ் பிரச்சனை முடிந்து காலை உணவு செய்யவும் தாமதம் ஆனது. வசுந்தரா தனக்கு தெரிந்த எதையோ சமைத்து சமாளித்தார். ஆனால் அது சாப்பிடும்படி இல்லை. அதனால் வீட்டில் ஆளுக்கு ஒரு விதமாக பேசி சாப்பிடாமல் போனார்கள். அதையும் வசுந்தரா தன்னால் சரஸ்வதி அளவுக்கு சமைக்க தெரியாது அதனால் மன்னித்துவிடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் கோதை, இனியாவது சமைக்க கற்றுக்கொள், ஒருவரை நம்பியே இந்த வீடு நகர கூடாது என்றார். மேலும் அரைகுறை சாப்பாட்டோடு அனைவரும் எழுந்தார்கள். இதை கவனித்த தமிழ் கொஞ்சம் பெருமை கொண்டார். தன் மனைவி இந்த வீட்டில் இல்லாமல் போனால் இந்த வீட்டின் நிலை mosamaagiradhu, கண்டிப்பாக சரஸ்வதி இல்லாமல் இந்த வீடு சரியாக இயங்காது என்றார். உடனே சரஸ்வதிக்கு அழைத்து பேசினார். வீட்டில் நடப்பதை கூறினார். வசுந்தராவால் சமாளிக்க முடியவில்லை, நீ இல்லாமல் இந்த வீட்டில் எந்த வேலையும் நடக்கவில்லை. அனைவருமே சரஸ்வதி இருந்து இருந்தால் இது இப்படி நடக்காது என்று கூறியதாக கூறினார். உடனே தன் வீட்டுக்கு கிளம்பி வருமாறு கூறினார். நானே வந்து அழைத்து வந்து விடுகிறேன் என்று கூறினார். ஆனால் சரஸ்வதி, வீட்டில் வேலை செய்ய ஆள் இல்லாமல் தான் என்னை அழைத்து செல்ல போகிறீர்களா? என் மேல் உங்களுக்கு காதல் இல்லையா? என்னை நீங்கள் தேடவே இல்லையா? என்று கேட்டார். உடனே தமிழ் கோவத்தில் நீ வீட்டுக்கு வரவே வேண்டாம் என்று கூறிவிட்டார் தமிழ். ஆனால் சரஸ்வதி என்ன சொல்ல வந்தார் என்பதையே கேட்கவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…