தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழிற்கு விருந்து வைத்து சரஸ்வதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பின் பாட்டி நேரடியாகவே சொக்கலிங்கத்திடம் சரஸ்வதியை தமிழுக்கு திருமணம் முடித்தால் என்ன என்று பேச்சை ஆரம்பித்தார். சொக்கலிங்கம் கோவத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கேட்டார். பெண் கேட்டு வருவது வீட்டில் உள்ள பெரியவர்கள் வர வேண்டும் அது தான் முறை என கூறினார். பின் வீட்டில் அனைவரும் வந்தால் தான் இந்த திருமணத்தை பற்றி யோசிப்பேன் எனவும் கூறிவிட்டார். தமிழ் அதற்கு தன் தம்பி கல்யாண வேளைகளில் இருப்பதால், அந்த கல்யாணம் முடிந்த பின் அழைத்து வருவதாக கூறினார். அதற்கும் சொக்கலிங்கம் கேள்வி எழுப்பினார். எதற்காக அண்ணன் இருக்கும்போது தம்பிக்கு திருமணம் செய்தார்கள் என ஆரம்பித்தார். பின் தமிழ் தான் அழைத்து வருவதாக கூறி விடைபெற்றார். கோதையை கோராவப்படுத்தும் வகையில் அவருக்கு மினிஸ்டர் பாராட்டுவிழா ஒன்று ஏற்பாடு செய்தார். அதேக்கு சந்திரகலா தான் சிறப்பு விருந்தினர் வேறு. இதற்கும் சந்திரகலா கோதையை அவமானப்படுத்த ஏதோ திட்டம் போட்டிருந்தார்.