தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியும் நமச்சியும் செய்த முயற்சி தோல்வி அடைந்தது. அர்ஜுன் கோதை கம்பேனிக்கு பதவி ஏற்கவும் தயார் ஆனார். வேலை செய்பவர்கள் முன்னிலையில் அர்ஜுன் இனி இந்த கம்பேனிக்கு தேவையான நேரம் முக்கிய முடிவுகளை என் இரு மகன்களும் எனது மருமகனும் சேர்ந்து தான் எடுப்பார்கள் என்று கூறினார். பின் அர்ஜுன் கை எழுத்து போட்டு பதவியும் ஏற்றார். பின் அனைவரும் வீடு திரும்பினார்கள். அங்கு ராகினி சரஸ்வதி இடம் சரியாக பேசவில்லை. குத்தலாகவே பேசினார். உங்கள் மீது வைத்து இருந்த மரியாதை இனி என் மனதில் வராது என்று கூறினார். பின் வசுந்தரா, அர்ஜுன் ராகினிக்கு அடம்பிடித்து திருமணம் செய்து வைத்தது நீங்கள் தான். பின் எதற்காக இப்படி செய்ய வேண்டும் என்று வசுந்தரா கேட்டார். அதற்கும் சரஸ்வதி பதில் கூறினார். அர்ஜுன் வந்த பின் தான் இந்த வீட்டில் அடுத்தடுத்து அவசகுணமாக நடக்கிறது என்று கூறினார். ஆனால் வசுந்தரா, அர்ஜுனை பற்றி visaarikkamal ராகினிக்கு திருமணம் செய்து வைத்தால் இந்த பழிகளை சுமந்து தான் ஆக வேண்டும் என்று கூறினார் வசுந்தரா. பின் வீட்டில் அனைவரும் சேர்ந்து சரஸ்வதியை திட்டும் பாணியில் குற்றவாளி போல் நிற்க வைத்து பேசினார்கள். கோதை, நடேசன், கார்த்திக், வசுந்தரா, ராகினி என்று மாற்றி மாற்றி பேசினார்கள். ஆனால் தமிழ் சரஸ்வதியை விட்டு கொடுக்கவே இல்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…