தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன் அப்பா தன் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து தான் இந்த திருமணத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்ததை தமிழிடம் கூறினார். இதை கேட்ட தமிழ் எதாவது செய்ய வேண்டும் என்று கோதையிடம் பேசினார். அடுத்த நாள் லோன் கொடுக்கும் நபர்கள் வீட்டிற்க்கு வந்து பத்திரத்தை சரி பார்த்தார்கள். ஆனால் அதை அடகு வைக்க வேண்டாம் தங்களுக்கு கோதை இண்டஸ்ட்ரிஸ் மிகவும் வெண்டபட்டவர்கள் என்று கூறினார்கள். அவர்களுடைய சம்பந்தி வீடு நீங்கள், அதனால் அவர்களை நம்பி நாங்களே லோன் தருகிறோம் என்று கூறினார்கள். இதை கேட்டதும் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அடுத்த நாள் தமிழ் சரஸ்வதியின் திருமண பத்திரிக்கை இருவீட்டாருக்கும் வந்து சேர்ந்தது. அதை பார்த்ததும் கோதை சொக்கலிங்கத்துக்கு அழைத்து பேசினார். முதல் பத்திரிக்கை சாமிக்கு வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அடுத்த நாள் அனைவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள். அங்கு சந்திரகலாவும் வந்தார். சரஸ்வதி கோவிலுக்கு வந்த உடன் கோதையை அழைத்து நன்றி கூறினார். வீட்டு பத்திரத்தை அடகு வைக்க வீட்டில் யாருக்குமே. மனசு வர வில்லை. சரியான நேரத்தில் உதவி செய்தீர்கள் என்று நன்றி கூறினார். இதை ஒட்டுக்கேட்ட கீதா அதை சந்திரகலா காதில் போட்டு வைத்தார். பின் சாமிக்கு பத்திரிக்கை வைத்து பூஜை முடிந்ததும் சந்திரகலாவுக்கு பத்திரிக்கை வைத்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…