தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வசுந்தராவை அவருக்கு பிடித்த இடங்களுக்கு கூட்டி செல்ல வேண்டும் என்று நினைத்தார். அதை தமிழ் இடம் கூறி அந்த செலவுக்கு பணம் வாங்கிக்கொண்டார். மேலும் வசுந்தராவை வெளியே அழைத்து செல்ல கோதையிடம் பொய் சொன்னார். எப்போதும் வாங்கும் இடத்தை விட்டு இன்னொரு கடையில் மளிகை பொருட்கள் கம்மி விலையில் கிடைக்கும் என்று கூறினார். மேலும் கோதையை அதற்கு சம்மதிக்கவும் வைத்தார். பின் வசுந்தராவை ஒரு அனாதை இல்லத்துக்கு அழைத்து சென்று நகு உள்ள குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்தார்கள். அதில் வசுந்தராவுக்கு இது வரை இல்லாத அளவுக்கு அதிகமாக சந்தோசம் கிடைத்தது. மன திருப்தியாக தன் பிறந்தநாளை கொண்டாடினார். பின் வசுந்தராவுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு அதை வாங்கி கொடுக்க நினைத்தார் சரஸ்வதி. வசுந்தரா தனக்கு திருமணத்துக்கு முன் போட்ட மாடர்ன் டிரஸ் எல்லாம் போட ஆசை என்று கூறினார். அதனால் சரஸ்வதி, வசுந்தரா மற்றும் மின்னல் மூவருமே மாடர்ன் டிரஸ் வாங்கி போட்டுக்கொண்டு ஊர் சுற்ற ஆரம்பித்தார்கள். அப்போது சரஸ்வதியை தன் காரை ஒட்ட வைத்தார் வசுந்தரா. சற்று நேரத்தில் சரஸ்வதி ஒரு இடத்தில் தடுமாற ஆர்மபிதார். அங்கு அவர்களது மாமனார் நமச்சியுடன் சேர்ந்து வடை பஜ்ஜி என்று வீட்டுக்கு தெரியாமல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அதை உடனே சரஸ்வதி வீடியோ எடுத்து வைத்துக்கொண்டார். பின் அந்த இடத்தில் வண்டியை எடுக்கும்போது நேராக கார்த்திக் வண்டியில் இடித்துவிட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…