Tamizhum Saraswathiyum Today Episode | 20.07.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதிக்கு ஆதரவாக பேசும் வசுந்தரா மீது மீண்டும் கோவம் கொண்டார் கார்த்திக். இதனால் அவர்களுக்கு ஏற்பாடு செய்த முதல் இரவு ஏற்பாடுகள் வீணானது. காலையில் வசுந்தரா நல்ல செய்தியோடு வருவார் என்று ஆவலோடு எதிர்பார்த்து இருந்தார் சரஸ்வதி. ஆனால் அவரிடம் பேசிய பின் தான் இரவு மீண்டும் சண்டை போட்டதை வசுந்தரா கூறினார். இதை கேட்டதும் சரஸ்வதி மீண்டும் வருதமடைந்தார். தமிழும் கார்த்திக் முகத்தில் இருக்கும் வாட்டத்தை பார்த்தே தெரிந்து கொண்டார் மேலும் எதோ பிரச்சனை என்று. பின் அவர்கள் தங்கி இருக்கும் இடத்தில் ஒரு போட்டி வைத்தார்கள். அவர்கள் போடும் பாட்டுக்கு ஆடா வேண்டும். கடைசி வரை யார் அசராமல் ஆடுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர் என்றார்கள். அந்த விளையாட்டில் கார்த்திக் வசுந்தராவை கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனால் கார்த்திக் அங்கு வருவதை விருப்பம் இல்லாமல் தான் வந்தார். சற்று நேரத்தில் போட்டியும் ஆரம்பம் ஆனது. முதலில் ஜோடி ஜோடியாக ஆட ஆரம்பித்து பின் தனி தனியாக ஆடினார்கள். அந்த போட்டியில் கடைசி வரை தாக்கு பிடித்தது தமிழ் மற்றும் கார்த்திக் இருவரும் தான். இதை கவனித்த தமிழ் கார்த்திக்கு விட்டுக்கொடுக்க நினைத்து கீழே விழுவது போல் செய்து வெளியேறினார். இதனால் கார்த்திக் வெற்றி பெற்றார். வசுந்தரா மற்றும் கார்த்திக் இருவருக்கும் ஒரு பரிசு கொடுத்தார்கள். இதை கார்த்திக் சந்தோசமாக ஃபோட்டோ எடுத்து கொண்டாடினார். அறைக்கு வந்ததும் மீண்டும் வசுந்தரா மீது வெறுப்பை கொட்டினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author