Tamizhum Saraswathiyum Today Episode | 20.10.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வீட்டில் பாட்டி சொக்கலிங்கத்தை நிற்க வைத்து கேள்வி கேட்டார். எதற்காக விருந்துக்கு வந்த பையனை அவமானப்படுத்தி அனுப்பினாய் என்று அதட்டினார். தமிழ் நம்ப குடும்பத்திற்கு உதவினார், மானத்தை காப்பாற்றினார் அதற்காக திருமணம் செய்து வைப்பது முறை அல்ல என்று கூறினார். பின் வாசுகியும் அதையே சொல்லிச்சென்றார். சற்று நேரத்தில் சரஸ்வதியும் தமிழும் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தார்கள். இந்த திருமணம் கண்டிப்பாக நடக்கும் என்று தமிழ் நம்பிக்கை கூறினார். அடுத்த நாள் காலையில் வசுந்தரா கார்த்திக்கை பார்ப்பதற்கு கோதை இண்டஸ்ட்ரீஸ்க்கு வந்தார். அவரை பார்த்ததும் கார்த்திக் அதிர்ச்சி அடைந்தார். பின் வசுந்தரா முதலாளி நாற்காலியில் அமர்ந்து இருப்பதை பார்த்த கோதை மற்றும் அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author