Tamizhum Saraswathiyum Today Episode | 20.12.2021 | Vijaytv
tamizhum Saraswathiyum 20.12.2021
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் சோகமாக மிகவும் குழப்பத்துடன் இருந்தார். மன வருத்தத்தில் இருந்த அவரை வாசுகி விசாரித்தார். என்ன நடந்தது என்று கேட்டார். அதான் தமிழ் தன் குடும்பத்தை கூட்டிவந்து சரஸ்வதிக்கு பூவும் வைத்து உறுதி செய்துவிட்டார்களே பின் எதற்கு வருந்த வேண்டும் என்று கேட்டார். பின் 50 பவுன் நகை போட முடியுமா என்று யோசனையில் உள்ளர் போல என நினைத்து அதையும் கேட்டார். ஆனால் சொக்கலிங்கம் தன் வருத்தம் அதுவல்ல, பொய் சொல்லி என் பொண்ணுக்கு கல்யாணம் செய்றேன். அதுவும் அவளது வாழ்க்கையே ஒரு பொய்யில் ஆரம்பிப்பது, எனக்கு விருப்பம் இல்லை எனவும் கூறினார். இதை வெளியில் நின்று கொண்டு இருந்த சரஸ்வதி கேட்டார்.இதை கேட்டதும் அவருக்கு மனம் உடைந்து போனது. உடனே தமிழுக்கு அழைத்து பேச வேண்டும் என்று வரவைத்தார். தமிழும் நமச்சியை அழைத்து வந்தார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…