Tamizhum Saraswathiyum Today Episode | 21.01.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன் பரிட்சைக்கு ஹால் டிக்கெட் வாங்க விண்ணப்பிக்க அவரது டியூஷன் சென்டர்க்கு விரைந்தார். அப்போது அந்த வழியாக வந்த கீதா சரஸ்வதியை பார்த்து எதற்கு இவளோ அவசரமாக போகனும் என்று வினவினார். அங்கு இருந்த இளநீர் கடைக்காரரிடம் பேசும்போது தான் சரஸ்வதி படிக்கவில்லை , +2 வே இன்னும் தாண்டவில்லை என்று தெரியவந்தது. உடனே சரஸ்வதியை தொடர்ந்து சென்றார். அந்த டியூஷன் சென்டரில் வேலை செய்யும் வாத்தியாருக்கு பத்திரிக்கை வைத்து தன் கல்யாணத்துக்கு அழித்துவிட்டு தனக்கு ஹால் டிக்கெட் வாங்க அவரது மார்க் ஷீட்டை எடுத்து கொடுத்தார். அப்போது அங்கு வந்த கீதா, இவளோ நாளாக M.B.A படித்ததாக எமாத்தி திருமணத்தை நடத்த திட்டம் போட்டீங்களா? இனி அது நடக்காது உடனே சந்திரகலாவிடம் இதை சொல்லி திருமணத்தை நிறுத்த போகிறேன் என்று சொல்லி மார்க் சீட்டை பிடிங்கி சென்றார். அவர் சென்ற ஆட்டோவை பின் தொடர்ந்து சென்றார் சரஸ்வதி. பின் தமிழுக்கும் அழைத்து நடந்ததை கூறினார். உடனே அந்த இடத்திற்கு தமிழும் வந்து சேர்ந்தார். கீதாவிடம் அந்த மார்க் சீட்டை தருமாறு கேட்டும் அவர் தராமல் ஓடினார். அதனால் ஒரு வண்டியில் மோதி விபத்து நடந்தது. உடனே அதை வீட்டிலும் தெரியபடுத்தினர். தகவல் தெரிந்ததும் கீதா வீட்டில் இருந்த அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…