Tamizhum Saraswathiyum Today Episode | 21.02.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum 21.02.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் மேல் வெறுப்பில் இருக்கும் அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர் பேசுவதை கேட்ட சந்திரகலா அவர்களை வைத்து இந்த குடும்பத்தை பிரிக்க நினைத்தார். உடனே அவர்களிடமே கீதாவை பேச வைத்து அவர்கள் திட்டத்திற்கு ஒத்துக்கொண்டார். பின் நடேசன் சாப்பிடும் இடத்தில் நடேசன் காதில் விழும்படியே அவர்கள் சொக்கலிங்கம் பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் தவறாக பேசினார். சரஸ்வதி நல்ல வசதியான இடம் என்பதால் தமிழை ஏமாற்றி அவரை மயக்கி காதலிப்பது போல் நடித்து இந்த திருமணத்தை நடத்தி உள்ளார்கள் என்று கூறினார். அவர்களுக்கு தமிழ் சொத்து மீது தான் குறி என்றும் தவறுதலாக பேசினார். இதை கேட்ட நடேசன் அதிர்ச்சி அடைந்தார். பின் அதே நேரம், சொக்கலிங்கத்துக்கு 20 லட்சம் ரூபாய் கடன் கொடுத்தவர் வந்தார். கோதை வார்த்தைக்காக தான் பணத்தை கொடுத்தேன், என் பணத்திற்கு ஒரு வழி சொல்ல வேண்டும் என்று கத்தினார். நடேசன் இருந்த கோவத்தில், இதை என்னிடம் கேட்க வேண்டாம். கடன் வாங்கிய அந்த ஆளே இருக்கிறார் என்னை எதற்காக கேட்க வேண்டும் என்று அவர் வெறுப்பை கொட்டினார். சொக்கலிங்கம் தான் அந்த கடனுக்கு பொறுப்பு என்று, இப்படி மரியாதை இல்லாமல் பேச வேண்டாம் எனவும் கூறினார். ஆனால் நடேசன், அவரை பற்றியும் சரஸ்வதி ஆளை மாயக்குபவள் என்று தப்பாக பேசினார். அதை கேட்டதும் கோவம் வந்த சொக்கலிங்கம் அவர் சட்டையை பிடித்தார் கோவத்தில். இதை பார்த்த கார்த்திக், சொக்கலிங்கத்தை சட்டையை பிடித்து தள்ளினார். இதை பார்த்த சரஸ்வதி கோவ்தில் கார்த்திக்கை அடிக்க கை ஓங்கினர். அதை பார்த்ததும் வீட்டில் அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..