Tamizhum Saraswathiyum Today Episode | 21.02.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி ஆசை ஆசையாக ராகினிக்கு அவருக்கு பிடித்த இனிப்பு செய்து கொடுத்தார். ஆனால் அதை அவர் ஊட்டி விட கூடாது என்று பார்வதி தடுத்தார். மேலும் இது எங்கள் வீட்டு வாரிசு, சரஸ்வதி செய்து கொடுத்தல் எதாவது தோஷம் வந்து விடும் என்று மறைமுகமாக கூறினார். ஆனால் கோதை மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் அது அனைத்துமே ஒரு மூட நம்பிக்கைதான் என்று கூறி சரஸ்வதியை ஊட்ட வைத்தார். அடுத்த நாளும் அதே போல் ராகினிக்கு வாந்தி மயக்கம் என்று இருப்பதால் அவருக்காக மாங்க சாதம் செய்து கொடுத்தார். ஆனால் அதையும் ராகினியின் மாமியார் கொடுக்க விடவில்லை. நேரடியாகவே தோஷம் வரும் என்று கூறினார். ஆனால் கோதை சரஸ்வதி எங்கள் வீட்டு மகாலட்சுமி, அவளால் எந்த தீங்கும் நடக்காது என்று கூறினார். இருந்தும் என் மருமகளுக்கு நானே எல்லாம் செய்து கொடுக்கிறேன் என்று கூறினார் பார்வதி. அடுத்து அர்ஜுன் தனக்கு இந்த காண்ட்ராக்ட் கிடைக்க வேண்டும் என்று கௌடோனில் இருந்த பழைய பொருட்களை வித்து 35லட்சம் பணம் பெற்று அதை வைத்து காண்ட்ராக்ட் எடுத்தார். அதே நேரம் கார்த்திக்கும் தனக்கும் ஒரு காண்ட்ராக்ட் கிடைத்து விட்டது என்று சந்தோசமாக கூறினார். ஆனால் கோதை முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. அடுத்து என்ன நடந்தது. காணொளியை பார்க்க …

About Author