தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக்கிடம் தான் தன் புருஷனின் கௌரவத்தை காப்பாற்ற கண்டிப்பாக படித்துக் காட்டுவேன் என்றார். சரஸ்வதி வீட்டில் சொன்ன பொய்யை உண்மையாக்குவேன் என்று சபதம் போட்டார். +2 பாஸ் செய்து பின் மேற்படிப்பும் படிப்பேன் என்று கூறினார். ஆனால் இதை கார்த்திக் வெறும் கட்டுக் கதையாக நினைத்தார். தமிழ் வெளி வேலை முடிந்து கம்பேனிக்கு திரும்பினார். வந்ததும் சரஸ்வதி வந்து இருக்கும் விஷயம் தெரிந்தது. உடனே அவரை பார்க்க சென்றார். பின் சரஸ்வதி தமிழுக்கு சாப்பாடு பரி மாற ஆரம்பித்தார். பின் இருவரும் இருவருக்கு ஒருவர் ஊட்டிக்கொண்டார்கள். நமச்சி தமிழிடம் சரஸ்வதியை வெளியே அழைத்துச் செல்ல ஐடியா கொடுத்தார். பின் வீட்டுக்கு வரும்போது மல்லிகைப்பூ வாங்கி வந்தார். இதை வாசனை வைத்தே கண்டு பிடித்த வசுந்தரா அவரை கிண்டல் செய்தார். பின் சற்று நேரத்தில் தமிழ் சரஸ்வதி இருவரும் வெளியே கிளம்பினார்கள். கோதை இடமும் கூறிவிட்டு கிளம்பினார்கள். வசுந்தரா இதை எல்லாம் பார்த்து தனக்கும் கார்த்திக் இதை போல் ஆசையாக எதாவது செய்வாரா என்று ஏங்கினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…