Tamizhum Saraswathiyum Today Episode | 21.04.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி ஒரு மெக்கானிக் வேலை செய்வதை பார்த்து அவரது அம்மா மற்றும் பாட்டி கொந்தளித்தார்கள். இதற்கு தான் தமிழ் வீட்டை விட்டு வெளியே வந்தாரா? அவர் கம்பேனியில் முதலாளியாக வேண்டும் என்று உன்னை இந்த கூலி வேலை செய்ய சொன்னாரா என்று அவர்களது கோவம் தமிழ் மீது வந்தது. உடனே தமிழை பார்க்க அவரது கம்பேனிக்கு சென்றார்கள். அங்கு போனதும் தமிழ் மீது வார்த்தைகளை கொட்டினார்கள். தமிழ் ஒன்றுமே புரியாமல் நின்றார். என் மகளை எப்படி இந்த மாதிரி ஒரு வேலைக்கு அனுப்பலாம்? அவளது நகை முழுதும் கொடுத்தும் மீண்டும் அவளை வேலைக்கு அனுப்ப எப்படி மனம் வந்தது என்று கத்தினார். ஆனால் இப்போதும் சரஸ்வதி வேலைக்கு போகவில்லை. அவர்கள் தவாராக நினைத்து இருக்கிறார்கள் என்று நினைத்தார். பின் தமிழ் உடனே அந்த கடைக்கு கிளம்பினார். அந்த கடையில் சரஸ்வதியை பார்த்ததும் தமிழ் நொறுங்கி போனார். கோவத்தில் கத்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author