Tamizhum Saraswathiyum Today Episode | 21.06.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் வசுந்தராவிடம் அவரது அம்மாவுக்கு பேதி மாத்திரை கலந்து கொடுத்தது சரஸ்வதி தான் என்று கூறினார். ஆனால் அதை ஒரு துளி கூட நம்பவில்லை வசுந்தரா. மேலும் அதை நிரூபிக்கிரேன் என்று சரஸ்வதியிடம் அழைத்துச் சென்றார் வசுந்தரா. சரஸ்வதியை பார்த்து கார்த்திக் உங்கள் மீது தேவை இல்லாத பழி போடுகிறார் என்று கூறினார். பின் வசுந்தரா விவரமாக கேட்டார். தன் அம்மா குடித்த இளநீரில் பேதி மாத்திரை கலந்து கொடுத்தது நீங்கள் தான் என்று கார்த்திக் கூறினான். ஆனால் எனக்கு உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. அதனால் தான் இங்கே அழைத்து வந்தேன் என்றார். அதை கேட்டதும் சரஸ்வதி உண்மையை சொல்ல முடியாமல் தவித்தார். வசுந்தரா கண்களை பார்த்து பேச முடியாமல் நின்றார். கார்த்திக் உடனே உன் கண்ணை பார்த்து பேச முடியாமல் நிற்கும்போது புரியவில்லையா என்று கேட்டார். பின் சரஸ்வதி பொய் சொல்ல மனம் வராமல் உண்மையை கூறினார். ஆனல் தனக்கும் தமிழுக்கும் இதில் சம்பந்தம் இல்லை. நமச்சி மின்னல் இருவரும் தான் எனக்கு தெரியாமல் இதை செய்தார்கள் என்று கூறினார். ஆனால் இந்த விஷயத்தில் சரஸ்வதி சம்பந்தப்பட்டு இருபப்தை வசுந்தராவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சரஸ்வதி மேல் இருந்த நம்பிக்கை சுக்கு நூறாக உடைந்தது. மேலும் சரஸ்வதியை அவர் எதுவுமே பேச முடியவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author