Tamizhum Saraswathiyum Today Episode | 21.09.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தராவுக்காக ஜுஸ் பழம் என்று சரஸ்வதி கொடுத்து பார்த்துக்கொண்டார். சரஸ்வதியை வீட்டில் அனைவரும் திட்டியதை அங்கு இருந்த நர்ஸ் மூலம் தெரிந்து கொண்டார் வசுந்தரா. உடனே குடும்பத்தார்கள் இடம் உண்மை என்ன என்று சொல்ல வேண்டும் என்று வசுந்தரா நினைத்தார். ஆனால் சரஸ்வதி அதை தடுத்துவிட்டார். நடந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார். இதனால் தனக்கு கேட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை என்று கூறினார். ஆனால் வசுந்தரா சொல்ல முயற்சி செய்தால் கூட அவரை பேச விடமால் செய்தார் சரஸ்வதி. பின் வீட்டுக்கு வந்ததும் கோதை அவரை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார். சந்திரகலா இந்த நிலையில் என் மகளை இங்கு விட என்னால் முடியாது, என்னுடனே அனுப்பி விடுங்கள் என்று கூறினார். இனியும் இந்த சரஸ்வதி இருக்கும் இடத்தில் வசுந்தரா இருக்க கூடாது என்று கூறினார். ஆனால் கோதை இனி இப்படி நடக்காது, வசுந்தரா எங்கள் வீட்டிலே இருக்கட்டும் என்று கூறினார். இதனால் கோவத்தில் சந்திரகலா கிளம்பினார். தமிழ் தனியாக சரஸ்வதி இடம் நடந்தது என்ன என்று விசாரித்தார். அப்போது சரஸ்வதி மேல் எந்த தவறும் இல்லை என்று தெரிந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…