Tamizhum Saraswathiyum Today Episode | 21.11.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 21.11.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் ராகினி வரவேற்பில் திடீர் என்று ஒரு பெண் அர்ஜுன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறினார். இதனால் வீடே அதிர்ச்சியில் இருந்தது. அர்ஜுன் இது உண்மை இல்லை என்று கூறினார். ஆனால் அதை நம்ப யாரும் தயாராக இல்லை. மேலும் அந்த பெண் அர்ஜுன் உடன் எடுத்த புகை படங்களை காட்டி இது எல்லாம் நாங்கள் காதலிக்கும் போது எடுத்த படங்கள். 6 மாதங்களாக ஒரு இடத்தில் வேலை பார்த்து, ஒரே வீட்டில் தான் தங்கி இருந்தோம். கணவன் மனைவியாக வாழ்ந்தோம் என்று கூறினார். அதை கேட்ட அனைவரும் அர்ஜுன் தப்பானவன் என்று நினைக்க ஆரம்பித்தார்கள். கடைசியில் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் இது போன்ற பிரச்சனை வரும் என்று எதிர் பார்த்தது தான். அதற்கும் ஏற்பாடு செய்து உள்ளோம் என்றார். அர்ஜுன் வேலை செய்த கம்பேனி G.M வந்து இருந்தார். அவரை வைத்து அந்த பெண் மட்டும் தான் அர்ஜுனை காதலித்தார் என்றும். இந்த புகை படங்கள் எல்லாம் அவருக்கு சாதகமாக அமைத்து இந்த திருமணத்தை நிறுத்தவே முயற்சி செய்கிறார் என்று உண்மையை கூறினார். இதற்கு முன்னும் பணத்தை எடுத்த பிரச்சனையிலும் இவர் சிக்கி இருக்கிறார் என்று கூறியதால் தான் அர்ஜுன் மீது மீண்டும் நம்பிக்கை வந்தது. உடனே அந்த பெண்ணை அங்கு இருந்து வெளியே அனுப்பினார்கள். போலீசில் புகார் செய்யலாம் என்று பேசியதற்கு, அர்ஜுன் அவள் வாழ்க்கை வீணாகி விடும் அது வேண்டாம் என்று கூறினார். சந்திரகலா தான் பிட்ட திட்டம் அனைத்தும் இப்படி சொதப்பி விட்டதே என்று கோவத்தில் இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…