Tamizhum Saraswathiyum Today Episode | 21.12.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து பொய் சொன்னதை திருத்த, கோதையிடம் உண்மையை கூற முடிவு செய்தார்கள். மின்னல் மற்றும் நமச்சி இருவரும் அதை தடுக்க முயற்சி செய்து பார்த்தார்கள். ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை. கோதையிடம் கிளம்பிய தமிழ் வீட்டுக்கு வந்ததும் அங்கு ஒரே சத்தமாக இருந்தது. கம்பேனியில் வேலை செய்பவர்கள் நியாயம் கேட்டு வந்து இருந்தார்கள். மாப்பிள்ளை என்ஜினியர் என்றும் மாசம் 60000 சம்பளம் என்றும் பொய் சொல்லி இருப்பதாக கூறினார்கள், ஆனால் அவர் 12000 சம்பளம் வாங்கும் ஒரு பியுன் என்ற உண்மையை மறைத்து உள்ளார்கள் என கூறினார்கள். அதை கேட்ட கோதை கோபம் கொண்டார். அந்த பொண்ணும் பொய் சொன்னதால் திருமணம் செய்ய ஒத்துக்கொள்ளவில்லை. இந்த பிரச்சனையை பார்த்த தமிழ் இன்னும் பதட்டம் அடைந்தார். சந்திரகலா மற்றும் கீதா இருவரும் இணைந்து திட்டம் தீட்டினார்கள். தமிழ் சரஸ்வதி இருவருக்கும் திருமணத்தை நடக்க விடமாட்டேன் என்று பேசிக்கொண்டார்கள். இதை சரஸ்வதி கேட்டுவிட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author