தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி கார்த்திக்கை அடிக்க கை ஓங்கினார்.அதை பார்த்த குடும்பத்தார் அதிர்ச்சியில் நின்றார்கள். பின் சொக்கலிங்கம் தன் மகளை அழைத்துக்கொண்டு கிளம்பினார் வீட்டுக்கு. தமிழ் இங்கு நடக்கிறது என்று தெரியாமல், கம்பனியில் ஓடாத மெஷினை வேலை பார்த்த சரி செய்தார். பின் இந்த வேலையை தான் தான் செய்தது என்று வீட்டில் யாரிடமும் கூறவேண்டாம் என்று கூறினார். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டார்கள். தமிழ் உடனே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு நடந்த கலவரங்கள் எதுவும் தெரியாமல் வந்து தன் அம்மாவை பற்றி விசாரித்தார். கீதா, சந்திரகலா இருவரும் அவரை வெளியில் துரத்த வேண்டும் என்று நடேசன் நினைக்கும்படி பேசினார்கள். நடேசனை சொக்கலிங்கம் சட்டையை பிடித்து இழுத்தது, கார்த்திக்கை சரஸ்வதி அடிக்க கை ஓங்கியது என்று நடந்தது தமிழுக்கு தெரிய வந்தது. ஆனால் அவர் அப்படியெல்லாம் செய்யும் ஆள் இல்லையே என்று கூறினார் தமிழ். இதை கேட்டதும், சந்திரகலா உடனே உன் அப்பா தம்பி அவமானப்பட்டது உனக்கு வருத்தமாக இல்லை. ஆனால் இப்போது கோடு சரஸ்வதி குடும்பத்தை மட்டுமே நம்புவாய் என்று கூறினார். இதை கேட்ட நடேசன், இங்கு இருந்து வெளியே செல்லுமாறு கத்தினார். என் கோதை இப்போது தான் கண் முழித்து இருக்கிறாள், உன் முகத்தை காட்டி அவளை சாகடித்து விடாதே என்று கூறினார். பின் வசுந்தராவிடம் தன் அம்மாவின் நிலையை விசாரித்து பின் சரஸ்வதி வீட்டுக்கு கிளம்பினார். கோதை கண் முழித்து தான் மயக்கத்தில் இருந்த போது என்ன நடந்தது என்று விசாரித்தார். ஆனால் யாரும் அதை பற்றி சொல்லவில்லை. சரஸ்வதி வீட்டிற்கு சென்றதும் என்ன நடந்தது என்று விவரம் கேட்டார். அப்போது நடேசன், சரஸ்வதியை தவறாக பேசியது கார்த்திக் சொக்கலிங்கம் மேல் கை வைத்து தள்ளியது என்று நடந்தவை தமிழுக்கு தெரிய வந்தது. பின் இந்த மொத்த பிரச்சனைக்கும் தான் சொன்ன பொய் தான் என்று புலம்பினார். சரஸ்வதி தன் தலை எழுத்து தான் இப்படி எல்லாம் நடக்க காரணம் என்று அவர் புலம்பினார். சரஸ்வதியின் குடும்பம் ஆறுதல் சொன்னார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….