தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வெளியே வந்து ஒரு ஹோட்டலில் சாப்பிட்டார்கள். அதில் சரஸ்வதிக்கு பிடித்த மட்டன் பிரியாணி தமிழ் கொண்டு வர செய்தார். ஆனால் சரஸ்வதி இந்த பெயரால் தான் என் வாழ்க்கையே மாறிவிட்டது. அதனால் எனக்கு அது வேண்டாம் என்று மற்ற உணவை சாப்பிட ஆரம்பித்தார்கள். பின் சாப்பிட்டு முடித்ததும் அந்த மட்டன் பிரியாணியை ஒரு பார்சல் கட்டி இல்லாதவர்களுக்கு கொடுத்தார்கள். வீட்டில் கோதை இவளோ நேரம் ஆகியும் தமிழ் சரஸ்வதி இருவரும் வரவில்லையே என்று பதட்டத்தில் இருந்தார். வாசலில் அவர்களுக்காக காத்திருந்தார். பின் அவர்கள் வந்ததும் அபி சாப்பாடு எடுத்து வைக்க போனார். ஆனால் தமிழ் வெளியே சாப்பிட்டு வந்து விட்டதாக கூறினார். அதை கேட்டதும் கோதை கோவத்தில் கத்தினார். வீட்டில் சாப்பாடை வீணாக்க எப்படி முடியும்? வெளியில் சாப்பிட சென்றால் சமைக்க வேண்டாம் என்று சொல்ல வேண்டாமா என்று கேட்டார். சரஸ்வதிக்கு இந்த வீட்டு வழக்கம் தெரியாது உணக்குமா தெரியாது என்று நடேசன் கேட்டார். உடனே சரஸ்வதி அந்த சாப்பாடை நாளை பழைய சோராக சாப்பிட்டு விடுவேன் என்று கூறினார். பின் மேலே வசுந்தரா உடன் கொஞ்ச நேரம் பேசினார் சரஸ்வதி. சாப்பாடு வெளியே சாப்பிட்டதற்கு கோதை திட்டியதை வசுந்தரா கேட்டதும் இந்த வீடே அப்படித்தான். எப்போதும் ரூல்ஸ் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள் என்று கூறினார். பின் சரஸ்வதி படிக்க உதவி செய்யுமாறு கேட்டார். ஆனால் அதை கார்த்திக் வந்து தடுத்துவிட்டார். பின் சரஸ்வதி தானாகவே இரவு படிக்க ஆரம்பித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…