Tamizhum Saraswathiyum Today Episode | 22.07.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 22.07.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வேண்டாம் என்று கூறிய ஐஸ் கிரீமை கார்த்திக் அவருக்கே தெரியாமல் வசுந்தரா மற்றும் சரஸ்வதிக்கு வாங்கி கொடுத்தார். பின் தமிழ் அதை பார்த்து கண்டித்தார். ஆனாலும் கார்த்திக் தன்மையாக பேசி அவரை சமாதானம் செய்து இவர்களை சாப்பிட வைத்தார். பின் நால்வரும் வேறு இடங்களை சுற்றி பார்க்க கிளம்பினார்கள். போகும் இடங்களில் இங்கு புகைப்படம் எடுத்தால் நல்லா இருக்கும் என்று கார்த்திக் அவரே முன் வந்து நிரிய புகைப்படங்களை எடுத்தார். மேலும் சரஸ்வதிக்கு உதவி செய்வது, அண்ணனுக்கு அடி பட்டால் அவரை தாங்குவது, அவர்களிடம் சிறிது பேசுவது, அவர்களோடு சேர்ந்து பழகுவது என்று கார்த்திக் நடவடிக்கையில் நல்ல மாற்றம் தெரிந்தது. இதை கவனித்த சரஸ்வதி மற்றும் தமிழ் இருவரும் இனி பிரச்சனைகள் சுமூகமாக போகும் என்று நம்பினார்கள். பின் சாப்பிட போன இடத்தில் அனைவரும் மாட்டன் பிரியாணி சாப்பிட நினைத்தார்கள். ஆனால் அதில் ஒரு பிரியாணி தான் இருக்கிறது என்று கடைக்காரர் சொல்ல, கார்த்திக் அந்த ஒரு மாட்டேன் பிரியாணியோடு 3 சிக்கன் பிரியாணியும் ஆர்டர் செய்தார். வசுந்தரா ஏன் என்று கேட்டதும் சரஸ்வதிக்காக என்று கூறினார். அதே நேரம் சரஸ்வதி கார்த்திக்கு பிடித்த மஷ்ரூம் ஆர்டர் செய்தார். அதை அவர் விரும்பி சாப்பிடுவார் என்று கூறினார். இதனால் கார்த்திக் மனதில் நல்ல ஒரு மாற்றம் வந்தது. தன் மீது தன் அண்ணன் அண்ணிக்கு நிறைய பாசம் என்று உணர்ந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….