Tamizhum Saraswathiyum Today Episode | 22.08.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 22.08.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி ஆதி தன் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியதால் மனம் உடைந்து போனார். இதனால் தன்னிலை அறியாமல் நடுரோட்டில் நடந்தது சென்றார். அந்த நேரம் ஆர்து அர்ஜுன் அவரை காப்பாற்றி காபி கடைக்குள் அழைத்து சென்றார். அவர் காப்பாற்றுவதை வீடியோ எடுத்து இன்டர்நெட்டில் அவரது நண்பர் போட, அது தீயாய் பரவியது. பின் ராகினிக்கு ஆறுதல் சொல்லும் விதமாக பேசி அவரை தன் வசப்படுத்த நினைத்தார். மேலும் ராகினி ஒரு அழகு தேவதை என்றும், அவரது கண்கள் அழகானது என்றும் புகழ்ந்து தள்ளினார். இதனால் ராகினியும் அவரது துக்கதில் இருந்து சற்று தெளிந்தார். கார்த்திக் மற்றும் தமிழ் இருவரும் கம்பேனி நிலவரம் பற்றி பேசினார்கள். முன்னை விட இப்போது வேலை அதிகமாக நடக்கிறது என்றார் கார்த்திக். அதே நேரம் தமிழ் சண்முகம் அண்ணனின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டாம் என்று கேட்டுகொண்டார். ஆனால் அதை கார்த்திக் ஏற்றுக்கொள்ளவில்லை. சற்று நேரத்தில் கார்த்திக்கு ராகினி வீடியோ ஒன்று பார்த்ததாக அழைப்பு வந்தது. உடனே அந்த வீடியோவை பார்த்து பதட்டம் அடைந்தார்கள். உடனே ராகினிக்கு அழைத்து பார்த்தார்கள். ஆனால் அழைப்பை ஏற்கவில்லை ராகினி. உடனே அந்த வீடியோவில் இருப்பது தன் நண்பன் அர்ஜுன் தான் என்று அவருக்கு அழைத்தார். பின் ராகினி மற்றும் அர்ஜுன் இருவரையும் வீட்டுக்கு அழைத்தார்கள். பின் வீட்டில் அனைவரும் மாறி மாறி அர்ஜுனை நன்றி சொல்லி புகழ்ந்தார்கள். மேலும் கோதை அவரை தன் கம்பேனியிலே வேலைக்கு சேரும்படி கூறினார். அவரும் முதலில் தயங்கிய பின் ஸ்மாமதித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…