Tamizhum Saraswathiyum Today Episode | 22.10.2021 | Vijaytv
tamizhumsaraswathiyum.22.10.2021
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை பரிசளிப்பு விழாவிற்கு கிளம்பினார். அவரது மகள் அவரை அலங்கரித்து அழகு பார்த்தார். பின் அனைவரும் சந்தோசமாக கிளம்பினார்கள். அப்பொழுது அங்கு கலா வந்து சேர்ந்தார். தானும் அந்த விழாவிற்கு வர வேண்டும் என்று ஆசை படுவதாக கூறினார். பின் கோதையும் அதற்கு ஏற்பாடு செய்து அனைவரும்கிலம்பினார்கள். அந்த விழாவில் சந்திரகலா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். மந்திரியும் வந்து சேர்ந்தார். அப்போது மந்திரியிடம் தனக்கு ஒரு கோரிக்கை இருப்பதாக கூறி ஒரு மனு கொடுத்தார் கோதை. அதை வாங்கி அலட்சியமாக பேசிய அவர், சந்திரகலாவின் சம்மந்தி என தெரிந்ததும் மரியாதை கொஞ்சம் கூடியது. கோதைக்கு சந்திரகலா தான் விருதளிக்க அறிவிப்பும் வந்தது. பின் விருதளிக்க கோதையை அழைத்ததும் அவர் வந்து தனக்கு சம்மந்தி கையால் விருது வாங்குவது இரட்டிப்பு மகிழ்ச்சி ஆனால் எனக்கு ஒரு வேண்டுகோள் என்று தன் தொழிலாளர்களில் ஒருவர் தனக்கு விருதளத்தால் கௌரவமாக இருக்கும் என்று விரும்பினார். ஆனால் அதை கேட்டதும் மிகவும் கோபடைந்தார் சந்திரகலா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…