தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அர்ஜுனை பார்த்து தனியாக பேசினார். கோவத்தோடு பேசினார். நீ எதற்காக இந்த வேலையை செய்தாய் என்று எனக்கு தெரியாது ஆனால் என்னையும் என் தம்பியையும் பிரித்து இந்த குடும்ப்த்தில் பிரச்சனை வர வைக்க முடியாது என்று கூறினார். இனியும் இது போன்ற எந்த விஷயத்தையும் இந்த குடும்பத்தில் செய்ய கூடாது என்று மிரட்டினார். அர்ஜுன் தன்னை பற்றி எதுவும் தெரியாது என்று நினைத்து இருந்தவருக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. மேலும் தன்னை நல்லவனாக காட்ட முதிர்ச்சி செய்தார். ஆனால் அதை எல்லாம் நடிப்பு என்று தமிழும் கூறினார். அர்ஜுன் மேலும் அவரை சரஸ்வதி தான் தன்னை தவறாக கூறியிருப்பார் என்று கூறினார். அதற்கும் சரியான பதிலடி கொடுத்தார் தமிழ். இந்த விஷயம் பற்றி எப்படி தமிழுக்கு தெரிந்தது என்று புரியாமல் நின்றார் அர்ஜுன். தன் அம்மா அக்கா விடம் இதை பற்றி சொல்லி புலம்பினார். கடைசியில் அவரது மாமா தான் காரணம் என்று தெரிய வந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…