Tamizhum Saraswathiyum Today Episode | 23.02.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் வாங்கிய 20 லட்சம் பணத்தை நடேசன் இடம் கேட்டு பிரச்சனை செய்தார். ஆனால் அதை சரி செய்கிறேன் என்று கூறி சந்திரகலா தனியாக பேசினார்.இப்போது அந்த குடும்பத்திற்கும் கோதை வீட்டிற்கும் சம்பந்தம் இல்லை அதனால் இங்கு கேட்க வேண்டாம் என்றார். பின் சொக்கலிங்கம் வீட்டின் பெயரில் தான் கடன் வாங்கினார்கள், அதனால் அந்த வீட்டை எழுதி வாங்கி விட்டு மீதி பணத்தை அவர்களுக்கு கொடுக்குமாறு ஒரு திட்டம் கொடுத்தார். அவர்களும் சரஸ்வதி வீட்டிற்கு சென்று இந்த வீட்டை எழுதி தருமாறு கூறினார்.அப்படி இல்லை என்றால் உடனே பணத்தை தருமாறு கூறினார். தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் நடந்ததை விவரமாக பேசினார்கள். தமிழுக்கு தன் அப்பா பேசியது தவறு தான் என்று கூறினார். ஆனால் அவர் அப்படி பேச கூடிய ஆள் இல்லை எனவும் கூறினார். கார்த்திக் மற்றும் சரஸ்வதி இருவர் செய்ததும் தவறுதான் என்றார். சரஸ்வதி தானே கார்த்திக் இடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். உடனே தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் மருத்துவமனைக்கு கிளம்பினார்கள். அந்த நேரம் பணம் கேட்டு பிரச்சனை செய்ததால் தமிழ் பணம் புரட்ட கிளம்பினார். அந்த சமயம் நேற்று கார்த்திக் மறுத்த வேலையை முடித்து கொடுத்த தமிழுக்கு அழைத்து பேசினார் பாய். லோடு முழுவதும் வந்து விட்டதும் பணமும் அனுப்பி விட்டேன் என்று கூறினார். உடனே தமிழ் தனக்கு ஒரு உதவி வேண்டும் என்று கேட்டார். தனக்கு அவசரமாக 20லட்சம் பணம் தேவை என்று கேட்டார். உடனே அவரும் தருவதாக ஒப்புக்கொண்டார். உடனே பணபட்டுவாடா நடந்தது முடிந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….