தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் சந்திரகலாவை பார்த்து வியாபார தந்திரங்களை கற்றுக்கொள்ள வந்தேன் என்றார். பின் அம்மா தமிழின் அனுபவத்தில் காற்றுகொள்ள வே என்று சொல்லி கடுப்பேத்துவதாக கூறினார். இந்த நேரம் சந்திரகலா அவருக்கு சாதகமாக பேசி தன் வழிக்கு கொண்டு வந்தார். அந்த நேரம் வசுந்தரா அழைத்து பேசினார். அப்போது சரஸ்வதி +2 பரிட்சை எழுத போவதாக கூறினார். அதற்காக தீவிரமாக படிக்கிறார் எனவும் கூறினார். யாரிடமோ சபதம் வேறு போட்டிருப்பதால் தீவிரமாக படிக்கிறார் எனவும் கூறினார். இதை கேட்டு சந்திரகலா கார்த்திக் இடம் இந்த விஷயத்தை கூறினார். அதற்கு சபதம் போட்டது என்னிடம் தான் என்று காலையில் நாட்ந்ததை கூறினார். கார்த்திக்கை போல் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை சந்திரகலா. இந்த விஷயத்தில் எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். அடுத்த நாள் பரிட்சைக்கு இரவு படித்து முடித்து பின் காலையில் எழுந்ததும் குளித்து படித்துக்கொண்டு இருந்தார் சரஸ்வதி. அவருக்காக இஞ்சி மெலகு தட்டி டீ எல்லாம் போட்டு கொடுத்தார் தமிழ். பரிட்சைக்கு கிளம்பும் முன் சாப்பாடு கஞ்சி மட்டும் போதும் என்றார் இதனால் கோதைக்கு சரஸ்வதி காய்ச்சலில் இருப்பது தெரிய வந்தது. இதனால் இந்த நிலையில் பரிட்சைக்கு போக வேண்டாம் என்று நடேசன் கூறினார். ஆனால் இது முக்கியமான பரிட்சை என்று கூறினார் சரஸ்வதி. +2 பரிட்சை அதுவும் ஃபெயில் ஆன பின் எழுத இவளோ சீன் போட வேண்டாம் என்று கடுப்பாக பேசினார். ஆனால் வசு சரஸ்வதியை ஊக்குவித்து வழி அனுப்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…