Tamizhum Saraswathiyum Today Episode | 23.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.23.12.2021
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதி இருவருக்கும் ஜாதகம் பார்க்க முடிவு செய்தார்கள். கோதை ஜாத்கத்தில் எதுவும் குழப்பம் வந்து விடுமோ என்று பயந்து வீட்டில் பூஜை செய்து வேண்டிக்கொண்டார்.அதே போல் சரஸ்வதி வீட்டிலும் பாட்டி வேண்டினார். சொக்கலிங்கம் மற்றும் வாசுகி இருவரும் ஜோதிட மையத்திற்கு சென்றனர். ஜோசியர் இரு ஜாதகத்தையும் பார்த்தார். பின் இவர்கள் இருவருக்கும் 10 பொருத்தமும் பொருந்துவதாக கூறினார். லட்சத்தில் ஒருவருக்கு தான் இப்படி பொருத்தம் இருக்கும் என்றும் கூறினார்.இதனால் வாசுகி மற்றும் சொக்கலிங்கம் இருவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். பின் வீட்டில் வந்து அனைவரிடமும் இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்கள். வாசுகி கோதைக்கு அழைத்தும் இந்த விஷயத்தை கூறினார். அதை கேட்டதும் இந்த வீட்டிலும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…