Tamizhum Saraswathiyum Today Episode | 24.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.24.01.2022

tamizhum Saraswathiyum.24.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கீதாவுக்கு விபத்து நடந்ததை அறிந்து வீட்டில் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். டாக்டர் அவர் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் அவர் கோமாவில் இருக்கிறார் என்று கூறினார். இதை கேட்ட அனைவரும் அதிற்சி அடைந்தார்கள். அவர் கண் முழித்து சுய நினைவு வர சில நாட்கள் ஆகலாம் இல்லை சில மாதங்கள் கூட ஆகலாம் என்றார். சந்திரகலா கீதாவை பார்க்க அங்கு வந்து சேர்ந்தார். உடனே டாக்டர் இடம் விசாரித்தார். பின் எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை குணப்படுத்துமாரு கூறினார். டாக்டர் தன் கையில் எதுவும் இல்லை என்றார். பின் அனைவரும் வீட்டில் நலங்கு வைக்க ஏற்பாடு செய்ததால் நாமச்சியை மட்டும் கீதாவுடன் இருக்கட்டும் என்று முடிவு செய்தார்கள். சற்று நேரத்தில் கீதா கண் விழித்தார் ஆனால் வருக்கு பேச்சு வரவில்லை. அதிற்சியில் பேச்சு வரவில்லை என்று கூறினார் டாக்டர். சந்திரகலா அப்படி என்ன நடந்தது, திடீர் என்று எப்படி விபத்து நடந்தது என்று கிளம்பினார். கீதாவால் தனக்கு தெரிந்த உண்மையை சொல்லவும் முடியவில்லை. சரஸ்வதி வீட்டிலும் நலங்கு வைக்க ஏற்பாடுகள் செய்தார்கள். மின்னல் அவசரமாக வண்டியில் செல்லும்போது ஆதியின் வண்டியில் மோதினார். அப்போது பதட்டத்தில் சரஸ்வதி திருமணம் முடியும் வரை இந்த பதட்டம் இருக்கத்தான் செய்யும் என்றார். சரஸ்வதி காதலிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து இந்த பதட்டம் தான் என்று உலரினார். ஆதி மீண்டும் காதலிதார்களா? என்று கேட்டதற்கு நான் அப்படி சொல்லவில்லையே என்று சமாளித்து கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author