Tamizhum Saraswathiyum Today Episode | 24.02.2022 | Vijaytv
Tamizhum Saraswathiyum 24.02.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கடன் கொடுத்தவர்கள் வந்ததும் சொக்கலிங்கம் அவரது வீடு பரிபோக போகிறது என்று நினைத்தார். ஆனால் அவர்கள் பணம் வந்துவிட்டதாக கூறினார்கள். வீட்டின் பத்தரத்தை சிக்களிங்கதிடம் திருப்பிக்கொடுத்தார்கள். ஆனால் சொக்கலிங்கம் யார் அந்த பணத்தை கொடுத்தது என்று தெரியாமல், புரியாமல் நின்றார். அப்போது பாட்டி தமிழ் தம்பி தான் இதை செய்து இருக்க வேண்டும் என்று கூறினார். நமச்சி அதை கேட்டதும் உடனே உண்மையை சொன்னார். தமிழ் தான் பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார் என்று தெரிந்ததும் குடும்பமே நன்றி கூறியது. தமிழ் இது என் குடும்பம் நான்தான் செய்ய வேண்டும் என்று உரிமையாக பேசினார். பின் அடுத்து கார்த்திக் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்று தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் மருத்துவமனைக்கு கிளம்பினார்கள். சொக்கலிங்கம் அங்கு சென்றால் தேவை இல்லாத பிரச்சனை தான் வளரும் அதனால் சில நாட்கள் கழித்து பேசலாம் என்றார். ஆனால் அதை காதில் வாங்காமல், நாங்களே பொறுமையாக பேசி பிரச்சனையை முடிப்பதாக கூறி கிளம்பினார்கள். சென்ற இடத்தில் இவர்களை பார்த்த சந்திரகலா மற்றும் கீதா இருவரும் அவர்களை மீண்டும் பிரச்சனை வந்துள்ளதாக கூறினார்கள். அதை நடேசன் கேட்டு அங்கிருந்து கிளம்பும்படி கூறினார். பாய் இடம் இருந்து பணம் வந்திருப்பதை பார்த்த கார்த்திக், உடனே அழைத்து பேசினார். அவரிடம் பேசியபோது தான் தான் வேண்டாம் என்று சொல்லியும் தமிழ் கூறியதால் லோடு அனைத்தும் போய் சேர்ந்து இருப்பது தெரியவந்தது. உடனே இனி இந்த கம்பேனியில் எல்லாமே நான் சொல்வது தான் நடக்கும். இனி தமிழுக்கும் இந்த கம்பேனிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். அதை கேட்டதும் உடனே அவர் அப்படி என்றால் உடனே தமிழ் வாங்கிய 20 லட்சம் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட கார்த்திக் அதிர்ச்சி அடைந்தார். அந்த கோவத்தில் வந்த கார்த்திக் தமிழ் மற்றும் சரஸ்வதியை பார்த்ததும் மீண்டும் கோபம் கொண்டார். தமிழ் இடம் 20 லட்சம் எதற்காக வாங்கினாய் என்று கேட்டார். அப்போது கார்த்திக் பேச, தமிழ் பேச சண்டை பெருசானது. தமிழ் கார்த்திக்கை அடித்தார். இது அனைத்தையும் கண்ணாடி வழியாக பார்த்த கோதை கண்ணீர் விட்டு அழுதார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..