Tamizhum Saraswathiyum Today Episode | 24.05.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 24.05.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பர்கர் சாப்பிடும் போட்டியில் வெற்றி பெற்றார். அதற்கு பரிசு கொடுக்க கோதை மற்றும் நடேசன் இருவரும் வந்து இருந்தார்கள். அதனால் சரஸ்வதி அவர் முகம் தெரியாதபடி மாஸ்க் அணிந்து கண்ணாடி அணிந்து அடையாளம் தெரியாதவாரு கோதை முன் வந்து நின்றார். கோதையும் அந்த பரிசை வழங்கினார். ஆனால் அவருக்கு இந்த பொண்ணை எங்கேயோ பார்த்து பழகியது போல் இருப்பதாக கூறினார். ஆனால் நடேசன் அதை சமாளித்து வீட்டுக்கு அழைத்து வந்தார். கோதை கிளம்பியதும் மீண்டும் சரஸ்வதி மின்னல் மற்றும் வசுந்தரா மூவரும் கடைகளுக்கு செல்ல ஆரம்பித்தார்கள். கார்த்திக் வீட்டுக்கு வந்ததும் கோதையிடம் தன் காரை இடித்ததை பெரிது படுத்தி பேசினார். ஆனால் கோதை அது பெரிய விஷயம் இல்லை, விட்டுத்தள்ளு என்று கூறினார். பின் சற்று நேரத்தில் ஊர் சுற்றி முடித்து வீட்டுக்கு திரும்பினார்கள் சரஸ்வதி மற்றும் வசுந்தரா இருவரும். பின் இரவு சாப்பாடு தயார் செய்தார் சரஸ்வதி. அதற்குள் கார்த்திக் இந்த பர்கர் போட்டியில் கலந்து கொண்டது சரஸ்வதி தான் என்று கண்டு பிடித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..