Tamizhum Saraswathiyum Today Episode | 24.06.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பூஜை பொருட்களை வசுந்தராவை வாங்கி வைக்க சொல்லிவிட்டு சென்றார். ஆனால் வசுந்தரா அதை கேட்கவே இல்லை. வசுந்தரா பூஜை பொருட்கள் வாங்கவில்லை என்றதும் பதறிய சரஸ்வதி உடனே அதை வாங்க கிளம்பினார். அதற்குள் கோதை மற்றும் நடேசன் இருவரும் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள். சரஸ்வதி கடைக்கு அபியை கூட்டி கொண்டு சென்றார். போகும் வழியில் தமிழுக்கு நடந்ததை கூறினார். அவரும் தன்னால் முடிந்ததை வாங்கி வருவதாக கூறினார். ஆனால் அதற்குள் பூஜைக்கு எந்த பொருளும் கோதை வீட்டில் இருந்து வரவில்லை என்பது தெரிய வந்தது கோதைக்கு. பூசாரியின் பொருட்கள் கடைசி நிமிடம் வரை வராததால் முகம் கொடுத்து பேசவில்லை. பொருட்கள் வரவில்லை என்று தெரிந்ததும் கோதை உடனே சரஸ்வதிக்கு அழைத்தார். சரஸ்வதி இப்போது தான் பொருட்களை வாங்கி கொண்டு இருப்பதாக கூறினார். கோவத்தின் உச்சியில் இருந்தார் கோதை. உடனே எந்த பொருளும் வாங்க வேண்டாம், பூஜை எல்லாம் முடிந்து விட்டது உடனே வீட்டுக்கு திரும்புமாறு கூறினார். சரஸ்வதியும் உடனே கிளம்பினார். தமிழுக்கும் அழைத்து வீட்டுக்கு வர சொன்னார். ஆனால் தமிழ் இந்த விஷயத்தை நினைத்துக் கொண்டு வண்டி ஓட்டுவதில் கவனம் இல்லாமல் இருந்தார். இதனால் அவர் நிலை தடுமாறி விபதும் நடந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…