தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, மின்னல் உலரியதை ஆதி தன் அம்மாவிடம் கூறினார். ஆனால் இதை சந்திரகலா மீண்டும் விசாரித்து உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.அதற்காக ஒரு திட்டத்தையும் போட்டார். ராகினியிடம் ஆதி பேசுவது போல் பேசி மின்னல் மொபைல் நம்பரை வாங்கினர். பின் மின்னலை அழைத்து தனக்கும் தமிழ் சரஸ்வதி இருவரும் காதலிக்கும் விஷயம் தெரியும் என்று கூறினார். இதை கேட்ட மின்னல் பதட்டம் அடைந்தார். பின் தமிழ் மச்சான் தான் சொன்னார் என்று கூறினார். அதையும் நம்பி மின்னல் உண்மையை உலறினார். பின் இதனை உறுதி செய்த சந்திரகலா அவர் திட்டங்களை ஆரம்பித்தார். தமிழ் மற்றும் சரஸ்வதியின் திருமண விசேஷங்கள் ஆரம்பம் ஆனது. பந்தக்கால் இருவீட்டிலும் வைத்தார்கள். பின் நலங்கு வைத்தார்கள். ஆட்டம் பாடல் என இரு வீட்டிலும் விசேஷம் களை கட்டியது. கீதா தனக்கு தெரிந்த உண்மையை எப்படியாவது சந்திர கலா விடம் சொல்லவேண்டும் என்று முயற்சித்தார். சந்திரகலாவுக்கு குறுஞ்செய்தியாக அனுப்ப நினைத்தார். நமச்சி இல்லாத நேரத்தில் அங்கு இருக்கும் நர்ஸ் இடம் ஃபோன் வாங்கி அனுப்பினார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…