தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அவர் கம்பேனி பெயரை வைத்து தான் 20 லட்சம் தந்து உதவி உள்ளார் என்று சொக்கலிங்கத்துக்கு தெரிய வந்தது. இதனால் அவர் அவமானத்தில் கூனி குறுகி போனார். நடேசன் பேசியது போல, என் மகளை வைத்து உங்களிடம் இருந்து பணம் பறித்து விட்டது போல் ஆகி விட்டதே என்று வருந்தினார். இது பெரிய தவறு என்று நினைத்தார். வீட்டில் அனைவரும் அவரை சமாதானம் செய்ய முயற்சித்தார்கள். ஆனால் அவர் சமாதானம் ஆக வில்லை. தன்னை தனியாக விடும்ப்படி கூறினார். பின் யாரும் இல்லா நேரம் பார்த்து வீட்டு பத்திரத்தை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். சந்திரகலா மற்றும் கீதா இருவரும் அவரை பார்த்ததுமே என்ன பிரச்சினை செய்ய வந்துள்ளார் என்று கேட்டார்கள். ஆனால் சொக்கலிங்கம் நடேசனின் பேச ஆரம்பித்தார். நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார். கோவத்தில் உங்கள் சட்டையை பிடித்து இருக்க கூடாது என்று வருந்தினார். என் மகளை தவறாக பேசியதால் என்னையும் மீறி நடந்தது விட்டது என்று கூறினார். ஆனால் நடேசன் வாயை திறக்கவே இல்லை. பின் சொக்கலிங்கம் தங்களுக்காக பணத்தை தமிழ் ஏற்பாடு செய்த விஷயம் எனக்கு தெரியாது. அந்த பணம் எனக்கு வேண்டாம், இந்த பத்திரத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் இங்கு கை எழுத்துப் போடணுமா போடுகிறேன் என்றார். நடேசன் காலில் விழுகாத குறையாக பேசிக்கிளம்பினார். அவர் சென்ற பின் தமிழ் எப்படி இப்படி மாறிவிட்டார். தமிழ் குணம் அப்படியே அந்த சரஸ்வதி மாற்றி விட்டாள் என்று சந்திரகலா நடேசன் மனதை மாற்றினார். ஆனால் வசுந்தரா அதெல்லாம் தவறு, நடேசன் பேசியதும் தவறு தான் அதனால் தான் சொக்கலிங்கம் கோவப்பட்டர் என்று எடுத்து கூறினார். எல்லார் மேலும் தப்பு இருப்பதாக எடுத்து கூறினார். ஆனால் கார்த்திக் அதை கேட்டு கோவம்கொண்டார். பின் கோதை கண் விழித்தார். அவருக்கு சாப்பாடு கொடுத்து நாளை வீட்டுக்கு கிளம்பலாம் என்று டாக்டர் கூறினார். வீட்டிலும் அனைவரும் சந்தோசமாக பவரிடம் பேசினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…