Tamizhum Saraswathiyum Today Episode | 25.03.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி அவரின் பரீட்சையை முடித்து விட்டு வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் வசுந்தரா அவரை உற்சாகமாக விசாரித்தார். பின் கோதை நடேசன் அனைவருமே அவர் வருகைக்காக காத்திருந்தது போல வந்து பார்த்தார்கள். சரஸ்வதி தன்னை விசாரித்ததற்கு நன்றி கூறினார். மீண்டும் எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வீர்கள் என்று கூறினார். பரிட்சை எழுத போன இடத்தில் அம்மா அப்பா இருவரையும் பார்க்கும் சூழ்நிலை அமைந்தது. வேறு வழி இன்றி பேசி விட்டேன். நாளை பார்த்தாலும் பேசலாமா என்று அனுமதி கேட்டார். இதெல்லாம் சொல்ல எனக்கு உரிமை இல்லை என்று கூறி சென்றார் கோதை. பின் தமிழும் சரஸ்வதியும் அவர்கள் அறையில் கூடிய சீக்கிரம் அம்மா நம்ம மன்னித்து ஏற்று கொள்வார் என்று நம்பினார்கள். பின் அடுத்த பரிட்சைக்கு படிக்க ஆரம்பித்தார் சரஸ்வதி. ஆனால் இன்னும் காய்ச்சல் சரி ஆக வில்லை. இரவு நேரம் நெருப்பை கொதித்தது. தமிழ் ராகினி இடம் உதவி கேட்க வந்தார். ஆனால் தயங்கி நின்றார். ராகினியும் என்ன என்று விசாரிக்க, தமிழ் உதவி வேண்டும் என்று கேட்டார். சரஸ்வதிக்கு காய்ச்சல் குறையவில்லை என்றார். பின் ராகினி சரஸ்வதியை பரிசோதித்து ஒரு ஊசி போட்டு விட்டார். அடுத்த நாள் காலையில் எழுந்ததும் சரஸ்வதியின் காய்ச்சல் குறைந்து இருந்தது. பரிட்சைக்கு கிளம்ப தயார் ஆனார். சந்திரகலா சரஸ்வதியை எப்படியும் பரிட்சை எழுத விட கூடாது என்று கீதா விடம் சேர்ந்து திட்டம் போட்டார். கீதா சரஸ்வதி மருந்தில் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து விடுவேன் என்று திட்டம் போட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author