தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி செய்த தவறுக்கு தண்டனை கொடுப்பேன் என்று கோதை கூறினார். மேலும் சரஸ்வதியை வீட்டு வாசலில் நிற்க வைத்தார். இரவு முழுதும் வெளியே நிற்க வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட சரஸ்வதியும் தான் செய்த தவறுக்கு தண்டனையை ஏற்றுக்கொண்டார். ஆனால் சரஸ்வதி தனியாக இரவில் நிற்க வேண்டாம் என்று நினைத்த கோதை, அவரும் வீட்டுக்கு வெளியே நாற்காலியை போட்டு அமர்ந்தார். இதை பார்த்த குடும்பத்தார்கள் அனைவரும் நீங்களே வெளியே இருக்கும்போது நாங்கள் மட்டும் எதற்கு வீட்டுக்குள் செல்ல வேண்டும் என்று ஒவ்வொருவராக வெளியே அமர்ந்தார்கள். இதை பார்த்த சரஸ்வதி தான் செய்த தவறுக்காக எதேக்காக வீட்டில் அனைவரும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கோதையிடம் கேட்டார். ஆனால் வசுந்தரா என் பிறந்தநாள் அதுவுமாக எதற்கு தண்டனை கொடுத்து கஷ்டப்படுத்த வேண்டும் என்று கேட்டார். இதனால் கோதையும் மனம் மாறி அனைவரையும் வீட்டுக்குள் செல்ல அனுமதித்தார். இதனால் சந்தோசத்தில் துள்ளி குதித்தார் சரஸ்வதி. தன்னை இந்த விஷயத்திலும் மன்னித்து ஏற்றதால் இனி கோதையிடம் எந்த பொய் நாடகமும் நடத்த கூடாது என்று முடிவு செய்தார் சரஸ்வதி. வசுந்தரா பிரிந்தநாளுக்கு பரிசு கொடுக்க கார்த்திக் பரிசுடன் அவர்கள் அறையில் காத்திருந்தார். அதை கவனித்த வசுந்தரா வேண்டும் என்று அறைக்குள் செல்லாமல் இருந்தார். இதை பார்த்த சரஸ்வதி வசுந்தராவுக்கு அறிவுரை கூறி உள்ளே அனுப்பி வைத்தார். வசுந்தராவும் கார்த்திக்யிடம் பழசை மறந்து இனி புது வாழ்க்கை ஆரம்பிக்கலாம் என்று கேட்டார். கார்த்திக்கும் அதே போல் யோசித்து இருந்தார். ஆனால் வசுந்தரா சரஸ்வதி சொல்லி தான் தன்னிடம் பேச வந்தார் என்று தெரிய வந்ததும் மீண்டும் கோவத்தில் படுத்துவிட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…