Tamizhum Saraswathiyum Today Episode | 25.05.2023 | Vijaytv
tamizhum Saraswathiyum. 25.05.2023
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டில் வந்து ராகினி கத்தி கூப்பாடு போட்டார். உன்னால் தான் அம்மாவுக்கு நெஞ்சு வலி வந்து இருக்கு. உன்னோட வளர்ச்சி அம்மாவை பாதிக்குது. உன்னால் தான் அம்மாவின் உயிருக்கு ஆபத்து என்பது போல் ராகினி பேசினார். அதை கேட்டதும் தமிழ் தன் மேல் எந்த தவறும் இல்லை, நான் யாருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை என்று கூறினார். ஆனால் மனதுக்குள் தன் அம்மாவுக்கு எந்த பிரச்சனையும் வர கூடாது என்று நினைத்தார். உடனே கோவிலுக்கு சென்றார். என்ன பிரச்சினை இருந்தாலும், அவர் என்னை பெற்றவர், என்னை வளர்த்தவர், பாசம் கட்டியவர் அதனால் அவர் உடலுக்கு எந்த ஆபத்தும் வர வேண்டாம் என்று சாமியிடம் வேண்டிக்கொண்டார்.