Tamizhum Saraswathiyum Today Episode | 25.11.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ஆதி அவர் செய்த தவறை தானே ஒப்புக்கொண்டு போலீஸிடம் சரணடைந்தார். இதனால் சந்திரகலா தன் மகனை இந்த நிலையில் பார்த்து கொந்தளித்தார். இந்த நிலைக்கு தள்ளிய அந்த தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து வாழவே கூடாது. மற்றும் கோதை நடேசன் அவர்கள் குடும்பமே சிதைந்து போக வேண்டும் என்று கூறினார் ஆதி. அதை கேட்ட சந்திரகலா, கண்டிப்பாக அவர்களை நான் நிம்மதியாக இருக்கவே விட மாட்டேன் என்று கூறினார். அதே நேரம் ராகினி மற்றும் அர்ஜுன் இருவரையும் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்தார்கள். வீட்டுக்குள் வந்ததும் பூஜை செய்து கற்பூரம் காட்டினார் சரஸ்வதி. அப்போது மீண்டும் நாத கற்பூரம் அமைந்தது, அதை பார்த்ததும் சரஸ்வதி எதோ சரி இல்லாதது போல் உணர்ந்தார். ஆனால் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. பின் பால் பழம் கொடுத்து புது ஜோடியை ஆசிர்வாதம் செய்தார்கள். கோதை மண்டபத்தில் நடந்த குளறுபடியால் மாப்பிள்ளையை தவறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆதி இப்படி நம்பிக்கை துரோகம் செய்து இருப்பேன் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறினார். வசுந்தரா தன் அண்ணன் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பின் அர்ஜுன் ராகினி இருவருக்கும் முதல் இரவு ஏற்பாடுகள் நடந்தது. அதே நேரம் வசுந்தராவுக்கு அர்ஜுன் kudumbm மேலும், அவரது அக்கா மேலும் எதோ சந்தேகமாகவே இருந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author