Tamizhum Saraswathiyum Today Episode | 26.0.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை மற்றும் சந்திர கலா இருவரது குடும்பமும் சேர்ந்து துணி கடைக்கு சென்றனர். தமிழ் சரஸ்வதியின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார். வசுந்தரா கோதையின் குடும்பத்தோடு ஒட்டி உறவாடி இருப்பது சந்திரகலாவிற்கு கோவத்தை வரவைத்தது. இதனால் அவர் கிளம்பிவிட்டார். பின் சரஸ்வதி பார்த்து பார்த்து வசுந்தராவிற்கு புடவை தேர்ந்தெடுத்தார். அதை தமிழ் தானே சொல்வது போல் பாவித்தார். சற்றுநேரத்தில் கோதை சரஸ்வதியை பார்த்துவிட்டார். பின் அவரையும் அழைத்து துணிகளை தேர்ந்தெடுக்கும்படி கூறினார். சரஸ்வதியும் வீட்டில் அனைவருக்கும் தானே துணிகளை தேர்ந்து எடுத்து வந்தார். கடைசியாக சரஸ்வதி கிளம்பினார். அதற்குள் கோதை உங்களுக்கும் புடவை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். சரஸ்வதி வேண்டாம் என்று கூறினார். ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவில்லை. பின் சரஸ்வதி மற்றும் மின்னல் இருவருக்கும் புடவை எடுத்து கொடுத்தார் கோதை.

About Author