Tamizhum Saraswathiyum Today Episode | 26.01.2022 | Vijaytv
Tamizhum Saraswathiyum.26.01.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவர் வீடும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்கள். தமிழ் சரஸ்வதி இருவருக்கும் ஆரத்தி எடுத்து மண்டபத்துக்குள் அழைத்து சென்றார்கள். சரஸ்வதியை பார்த்த சொந்தக்காரர்கள், பொண்ணு பார்க்க லக்ஷ்மி கடாட்சம் நிறைந்து உள்ளது என்று கூறினார்கள். இதனால் கோதைக்கு பெருமை தாங்கவில்லை. பின் சரஸ்வதி அங்கு செய்து இருந்த ஏற்பாடுகளை பார்த்து வியந்து போனார். தான் ஆசை பட்டது போல் ஆட்டம் பாடல் என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். கோதை இவை அனைத்தும் வசுதான் ஏற்பாடு செய்தாள். நீயும் மின்னலும் இதை எல்லாம் பற்றி பேசியதை வசு கேட்டவுடன் இவை அனைத்தையும் அவளே ஏற்பாடு செய்தாள் என்றார் கோதை. இதை கேட்ட சந்திரகலாவுக்கு எரிச்சலாக இருந்தது. இதே போல் வசு மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.கீதா அந்த மருத்துவமனையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் நமச்சி எப்படியோ சமாளித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….