Tamizhum Saraswathiyum Today Episode | 26.05.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் பீச் பக்கம் சென்று பின் வீட்டுக்கு திரும்பினார்கள். திரும்பும் வழியில் சரஸ்வதி தன தமிழின் வண்டியை ஓட்டினார். அப்போது ஒரு வண்டியை முந்தி செல்ல வேண்டும் என்று முயற்சி செய்து அந்த வண்டியில் மோதி விட்டார் சரஸ்வதி. இதனால் அந்த வண்டி ஓட்டி வந்த நபர் கோவத்தில் இறங்கி வந்தார். வந்தவரை பார்த்த தமிழ் சிரித்து பேசினார். இவர் நம் கம்பேனியில் ஏற்கனவே வேலை பார்த்தவர் தான் என்று கூறினார். மேலும் அந்த நபரும் தான் வேலை செய்யும் கம்பேனியில் இப்போது வேலை பளு அதிகம் என்றார். இதை பற்றி பேசியதும் தமிழுக்கு ஒரு ஐடியா கிடைத்தது. அந்த நபர் சொன்ன புது புராஜக்ட்க்கு எங்கள் கம்பேனியில் இருந்து மெட்டீரியல் வாங்களாமே என்று கேட்டார் தமிழ். அதற்கு அந்த நபரும் அவர் கம்பேனியில் பேசி முடிவு செய்வதாக கூறினார்.பின் வீட்டுக்கு திரும்பினார்கள் தமிழ் மற்றும் சரஸ்வதி. அவர்களை பார்த்த கோதை அதிகாலையில் இங்கு சென்றாய் என்று விசாரித்தார். அப்போது சரஸ்வதி உண்மையை சொல்ல வேண்டும் என்று நடந்த அத்தனையும் சொன்னார். ஆண்கள் ஓட்டும் வண்டியை ஓட்டுவது பாதுகாப்பு இல்லை அதனால் இனி அதை ஒட்ட வேண்டாம் என்றார் கோதை. பின் தமிழின் நண்பர் அழைத்து இந்த வேலையை உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் பிரசன்டேஷன் தயார் செய்து அனுப்ப சொன்னார். இதனால் உடனே கோதையை அழைத்து பேசினார் தமிழ். இந்த புராஜக்ட் நமக்கு கிடைத்தால் கண்டிப்பாக மேலும் 200 நபர்களை வேலைக்கு சேர்க்கலாம். நமது கம்பேனியும் வளரும் என்று கூறினார் தமிழ். ஆனால் கார்த்திக் அதை கேட்டு கோவத்தில் இது சரியாக வராது என்றார். தமிழ் எதற்காக வேண்டாம் என்று கேட்டதற்கு, ன்ன அன்று சொன்ன புராஜக்ட் ஒன்று சரியாக வராது என்று சொல்லி தட்டி கழித்துவிட்டு, இப்போது நீங்கள் சொன்ன புராஜக்ட் மட்டும் எப்படி எடுக்க முடியும் என்று வீம்புக்கு பேசினார். ஆனால் கோதை அவரை கண்டித்து பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..