Tamizhum Saraswathiyum Today Episode | 26.05.2023 | Vijaytv
tamizhum Saraswathiyum. 26.05.2023
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் நடந்துகொள்ளும் விதம் எதுவும் சரி இல்லை என்று வசுந்தரா சரஸ்வதியிடம் பேசினார். அதே போல் கார்த்திக் இடம் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று கேட்டார். ஆனால் அதற்கும் கார்த்திக் பதில் அளிக்கவில்லை. இந்த வீட்டில் தான் நான் எது செய்தாலும் அதற்கு எதிர்ப்பு சொல்ல ஆள் இருக்கிறார்கள். எந்த முடிவும் என்னை எடுக்கவிடுவது இல்லை. அதனால் யார் இந்த வீட்டில் அனைத்து முடிவையும் எடுக்கிரார்களோ அவரிடமே கேட்டுக்கொள் என்று கத்தினார். இதனால் வசுந்தரா கார்த்திக் இடையே வாக்குவாதம் அதிகரித்தது. மேலே அவர்கள் இருவரும் கத்தி சத்தம் போட்டு சண்டை போடுவது வீட்டில் அனைவருமே கேட்டார்கள். கோதை நடேசன் இருவரும் வசுந்தராவை தனியாக அழைத்து பேசினார்கள். எதற்கு இப்படி சண்டை போட வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு கார்த்திக் சில தவறுகள் செய்தாலும் அதை சரி செய்து வழி நடத்துவது உங்கள் கடமை. ஆனால் அவன் எந்த முடிவையும் எடுக்க விடாமல் இருப்பதற்கு எதற்காக அவனை இந்த பதவியில் வைக்க வேண்டும். அந்த கோவத்தை தான் என் மேல் காட்டுகிறான் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…