தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் வசுந்தரா அவர்களின் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்து முதல் இரவுக்கு தயார் ஆனார்கள். ஆனால் அப்போது ஒரு அழைப்பு வந்தது கார்த்திக்கு. அதில் கம்பேனியில் வேலை விஷயமாக அழைத்து இருந்தார்கள். அப்போது இந்த வேலை பற்றி தமிழ் அண்ணனிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றார். ஆனால் அந்த நபர் தமிழ் அண்ணன் கார்த்திக் சொன்னால் எல்லாமே சரியாக தான் இருக்கும், அதனால் அவனிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார் என்று அவர் கூறினார். அதை கேட்ட கார்த்திக் மிகவும் சந்தோசத்தில் அந்த வேலைக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறினார். இதனால் வெகு நேரம் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. பின் அறைக்கு வந்து பார்த்தால் வசுந்தரா தூங்கி போய் இருந்தார். இதனால் கார்த்திக் அவரை தொந்தரவு செய்யாமல் அவரும் தூங்கினார். அடுத்த நாள் காலையில் சரஸ்வதி வசுந்தரா விடம் ஏதேனும் நல்ல விஷயம் உண்டா என்று கேட்டார். ஆனால் வசுந்தரா தயங்கி தயங்கி நடந்ததை கூறினார். இதனால் கோவத்தில் சரஸ்வதி அவரை திட்டி தீத்ர்தார். பின் நால்வரும் சேர்ந்து போட்டிங் செல்ல கிளம்பினார்கள். கார்த்திக் வசுந்தரா ஒரு போட்டிலும் தமிழ் சரஸ்வதி இருவரும் மற்றொன்றிலும் சென்றார்கள். போன இடத்தில் தமிழ் கை தவறி அவரின் கையில் இருந்த துடுப்பை கீழே விட்டுவிட்டார். அப்போது நிலை தடுமாற ஆரம்பித்தார்கள். அதை தூரத்தில் இருந்து பார்த்த வசுந்தரா அவர்கள் ஏதோ ஆபத்தில் இருப்பது தெரிய வந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…