தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, நடேசன் வீட்டுக்கு ஷண்முகம் வந்து வளைகாப்புக்கு அழைத்தார். அவரை கார்த்திக் மற்றும் அர்ஜுன் இவர் நம் கம்பேனிக்கு துரோகம் செய்தவர் என்று குத்தலாக பேசினார்கள். ஆனால் நடேசன் மற்றும் கோதை இருவரும் அவர் பழைய நண்பனும் கூட என்று கூறினார்கள். அர்ஜுன் அந்த விழாவுக்கு கண்டிப்பாக தமிழ் சரஸ்வதி இருவரும் வருவார்கள் என்று கணித்தார். அதனால் உடனே தானும் கார்த்தியும் அங்கு செல்ல வேண்டும் என்று திட்டம் போட்டார். அடுத்த நாள் சண்முகம் வீட்டு விஷேஷத்துக்கு கிளம்ப வேண்டும் என்று தமிழ் கூறினார். ஆனால் சரஸ்வதி வரவில்லை என்று தயங்கினார். தமிழிடம் தனக்கு முக்கியமான வேலை இருக்கிறது, தன்னால் வர முடியாது என்று கூறினார். ஆனால் தமிழ் அது பொய் என்று கண்டு பிடித்தார். சரஸ்வதி தனக்கு குழந்தை இல்லை என்பதால் வளைகாப்புக்கு வர மாட்டேன் என்று தயங்கினார். ஆனால் அதை தமிழ் புரிந்துகொண்டு கண்டிப்பாக இது போன்ற மூட நம்பிக்கையை நம்ப வேண்டாம் என்று கூறினார். எப்படியோ பேசி தமிழ் சரஸ்வதியை கிளம்ப வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க ….