Tamizhum Saraswathiyum Today Episode | 27.01.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum.27.01.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை சொக்கலிங்கம் மனதை புண் படும்படி பேசிவிட்டோமோ என்று எண்ணி மன்னிப்பு கேட்க கிளம்பினார். ஆனால் சொக்கலிங்கம் தானாகவே அங்கு வந்து அதற்கு அவசியம் இல்லை என்று கூறினார். நான் பணம் அதிகமாக செலவு செய்ய கூடாது, நான் மற்றவர்கள் முன் அவமான பட கூடாது என்று எல்லாமே பார்த்து பார்த்து செய்ய கோதை என் கூட பிறந்த தங்கச்சி கூட இல்லையே என்று வருத்தப்பட்டார். ஆனால் கோதை தான் அவரை தன் உடன்பிறப்பாக தான் பார்ப்பதாக கூறினார். கோதை சொக்கலிங்கம் மேல் வைத்து இருக்கும் மரியாதை, பாசம் மற்றும் குணம் அனைத்தையும் பார்த்து சொக்கலிங்கம் குற்ற உணர்ச்சியில் நொந்துகொண்டார். தான் இவளோ பெரிய விஷயத்தை மறைத்து இந்த திருமணத்தை நடத்துவதை பார்த்து பதட்டமஅம் அடைந்தார்.அவருக்கு படபடப்பு அதிகரித்தது. உண்மை தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்து வருந்தினார். சரஸ்வதியின் திருமணத்தில் மருதாணி வைக்கும் சடங்கு ஆரம்பம் ஆனது. அதற்கு வசுந்தரா அனைத்து ஏற்பாடுகளும் செய்து இருந்தார். மருதாணியில் எந்த இரசாயனமும் இல்லையே என்று கோதை விசாரித்தார். ஆனால் வசுந்தரா அவசரமாக ஏற்பாடு செய்ததால் அது கிடைக்கவில்லை என்றார். அப்போது பாக்கியல்க்ஷ்மி சீரியலில் இருந்து பாகியா, ஜென்னி, ஈஸ்வரி மாற்றி இனியா அங்கு வந்தார்கள். அவர்கள் தானாகவே மருதாணி அரைத்து எடுத்து வந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…