தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா சொன்னபடியே கோதை கம்பேனிக்கு ஏற்கனவே வேலை கொடுக்கும் டீலர் இடம் நடப்பதை தவறாக பேசி அவர் மனதை மாற்றி விட்டார். அதனால் நேராக கோதை வீட்டுக்கே அவர் வந்து இருந்தார். தன்னிடம் வியாபாரம் செய்யும் போது எப்படி வேறு ஒரு பக்கம் வியாபாரம் செய்ய முடியும் என்று கேட்டார். ஆனால் கோதை ஒன்றும் புரியாமல் விளக்கம் கேட்டார். மேலும் அவர் புதிதாக வியாபார செய்ய ஆள் கிடைத்தால் எனக்கு எப்படி நீங்கள் பொருட்களை தரமாக தர முடியும் என்று கேட்டார். ஆனால் இதில் எந்த குழப்பமும் வராது என்று கோதை எவளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. ஆனால் அவர் பேசியதை கேட்ட கார்த்திக் அவரையும் மரியாதை இல்லாமல் பேசினார். நீ இல்லை என்றால் எனக்கு வேறு ஒரு கிளையண்ட் கிடைக்கும் என்று எடுத்தெறிந்து பேசினார். இதனால் இன்னும் கோவம் கொண்டார். மேலும் இனி நமக்குள் எந்த வியாபாரமும் நடக்காது என்று சொல்லி விட்டார். கோதை கார்த்திக்கை கண்டித்தார். இப்படி வியாபாரத்தில் பொறுமை இல்லாமல் நடப்பது சரி இல்லை என்றார். ஆனால் கார்த்திக் அதை காது கொடுத்து கேட்கவில்லை. இந்த விஷயம் தெரிந்த தமிழ் உடனே அவரை தனியாக பார்த்து மன்னிப்பும் கேட்டார். ஆனால் அவர் கார்த்திக் மீது இருந்த கோவத்தில் இன்னும் 6 மாதங்களுக்கு உங்களது கம்பேனியில் எந்த வேலையும் கொடுக்க மாட்டேன் என்றார். பின் கோதை கார்திக்கு அறிவுரை கூறி தமிழை போல் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு கார்த்திக் என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…